ஒழுங்குமுறைகள்
ஒழுங்குமுறைகள் - பத்துக் கட்டளைகள்

1. பதிவு செய்தவர்களால் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும். பதிவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்தபின் உள்நுழைவதற்கு 4 இலக்க எண் கடவுக் குறியீடாகக் கொடுக்கப்படும். இந்தக் குறியீட்டு என்னை ஒவ்வொரு முறையும் பயன்படுத்திதான் உள்ளே நுழைய முடியும்.

2. ஒவ்வொரு ஞாயிறன்றும் விவிலிய வினாடி வினாப் போட்டி நடைபெறும். உங்களுக்கு வாய்ப்பான, வசதியான நேரத்தில் இப்போட்டியில் நீங்கள் பங்கெடுக்கலாம். ஞாயிறன்று பங்கெடுக்காமலிருக்க தவிர்க்க முடியாத காரணம் இருந்தால் பரிசீலனை செய்யப்பட்டு மற்றொரு நாள் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்படும். பங்கெடுக்கும் பொழுது தொழில்நுட்பக்கச் சிக்கல் எதுவும் சந்திக்க நேர்ந்தால் உடனே தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும்.

3. ஒரு மணி நேரம் இப்போட்டி நடைபெறும். தாங்கள் தொடங்கும் நேரத்திலிருந்து ஒரு மணி நேர கால அளவு கணக்கிடப்படும். ஒரு மணிநேரத்தில் எத்தனை வினாக்களுக்கு சரியான விடையைத் தருகின்றீர்களோ, அதுவே உங்களது மதிப்பெண்ணாகக் கருதப்படும்.

4. போட்டியின் நடுவில் நிறுத்தி வெளியே வருபவர்கள் மீண்டும் உள்ளே நுழைய முடியாது. ஒருமணிநேரம் முழுமையாகப் பங்கேற்க வேண்டும். இடையில் வெளியேறினால் நீங்கள் வெளியேறியது வரை பெற்ற மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்களாகக் கருதப்படும்.

5. பல விடைகளைக் கொடுத்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கின்ற வகையில் கேள்விகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புத்தகமும் முடிந்த பிறகு அந்த புத்தகத்தைப் பற்றிய தங்களின் புரிதல் திறனை பரிசோதித்துப் பார்க்கவும் கேள்விகள் கேட்கப்படும்.

6. ஒவ்வொரு புத்தகத்திலும் பின்வரும் தலைப்பை அடிப்படையாகக் கொண்டு போட்டிச் சுற்றுகள் அமையும். 1. பெரிய நூலாக இருந்தால் இரண்டு பிரிவாக பொதுவான கேள்விகள் 2. நூலில் வரும் விவிலிய மாந்தர்கள் 3. நூல் கடந்து செல்லும் வரலாறு, இடங்கள் 4. ஒட்டுமொத்தமாக புரிந்த திறனை பரிசோதித்தல்.

7. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நூல்களுக்கான வினாடி வினாப் போட்டிகள் நிறைவுற்றதும், பழைய ஏற்பாட்டிலிருந்து மூன்று, புதிய ஏற்பாட்டிலிருந்து இரண்டு என்ற அடிப்படையில் மொத்தம் ஐந்து திறனாய்வுத் தேர்வுகள் நடைபெறும்.

8. விவிலிய நூல்களின் உள்ளடக்கம், இறைவார்த்தை அடிக்குறிப்புகள், அதிகார வசனங்கள், விவிலிய அறிஞர்களின் முன்னுரைகள், பதிவு செய்யப்படும் கேள்விகளுக்குத் தரப்படும் பதில்கள் என அனைத்துப் பகுதிகளிலிருந்தும் போட்டிகளுக்கான கேள்விகள் கேட்கப்படும்.

9. பங்கேற்பாளர்கள் தங்களது மதிப்பெண்ணை போட்டி முடிந்த அடுத்த நாள் பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திற்கான போட்டி முடிந்த பிறகு அணைத்துப் பங்கேற்பாளர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.

10. ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்கும்போது தாங்கள் வாசிக்கும் பகுதியில் தெளிவுகள் வேண்டுமெனில் “கேள்விகள் பதிவு” பக்கம் வழியாக தங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொண்டு விவிலிய அறிஞர்கள் தருகின்ற தெளிவைப் பெறலாம்.